இன்று பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (09-08-2015)

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே/> விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே/> விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மை யில் இவரே  என்றார்கள்./> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/>


திருப்பலி முன்னுரை - 1

பொதுக்காலத்தின் 19 வது ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம். இயேசுவால் வாழ்வுபெற்று அவரில் என்றும் நிறைந்து வாழ அணியமாகி இன்று ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'அவருடைய' வாழ்வு நம்மில் முழுமையாயிருக்க, நிறைவாயிருக்க, உலகத் தொடக்கமுதலே நமக்கென கடவுளாகிய ஆண்டவர் நமக்கு ஒரு உணவை அணியமாக்கினார். வானக உணவு> விண்ணக உணவு> வானோர் உணவு> விண்ணக விருந்து என பலவகையாகக் குறிப்பிடப்பட்ட அந்த உணவுதான் 'வாழ்வுதரும்' உணவு.

இந்த ஒப்புயர்வற்ற இறை நன்மை எனும் 'வாழ்வுதரும் உணவை' இன்று இத்திருப்பலியில் நம்மத்தியில் நாம் கொண்டாடும் இந்த வழிபாட்டில் காணப்பெறுகிறோம். வழிபடுகிறோம்> அவரை உண்கிறோம். இந்த நிலை நமக்குக் கிடைத்தற்கரிய ஒரு பெரும் பேறு. எனக்குக் கிடைக்கும் சிறப்புமிக்க வாய்ப்பு> எனக் கண்டுணர்ந்து அதற்கேற்ற மதிப்பு மரியாதையுடன் இத்திருப்பலியில் ஒன்றிணைவோம். ஆமென்.

திருப்பலி முன்னுரை - 2

இந்த ஏழை கூவியழைத்தான்: ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமது மன்றாட்டைக் கேட்டு, நமக்குப் பதிலளித்து, எல்லாவகையான அச்சத்தினின்றும் நம்மை விடுவிக்கும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் பத்தொன்பதாம்ஞாயிறு.

உண்மைக் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதற்கான நெறிமுறைகள் எவை என்பதை இறைவாக்குகள் தெளிவாக எடுத்தக் காட்டுகின்றன. கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்க வேண் டாம் என்றும். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் நம்மை விட்டு நீக்கும்படியாகவும், ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டும் படியும்: கடவுள் நம்மைக்கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நாமும் ஒருவரை ஒருவர் மன்னிக்கவேண்டுமெனவும் அவை நம்மைக் கேட்டு நிற்கின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் இறைவன் தரும் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து, புதிய படைப்பாகி இறைவழி செல்ல இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நிலைவாழ்வுக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகம், எலியாவின் பாலைநில அனுபவத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. தனக்கு நேர்ந்த துன்பங்களால் துவண்ட எலியா, தன் உயிரை எடுத்துக் கொள்ளுமாறு ஆண்டவரிடம் மன்றாடுகிறார். ஆண்டவரோ வானதூதர் வழியாக அவருக்கு அப்பமும் தண்ணீரும் அனுப்புகிறார். அந்த உணவால் வலிமை பெற்ற எலியா, நாற்பது நாட்கள் பாலைநிலத்தில் நடந்து கடவுளின் மலையை அடைந்தார் என்பதைக் காண்கிறோம். எலியாவைப் போல கடவுள் தரும் உணவால் வலிமை பெற வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
அரசர்கள் முதல்நூலிலிருந்து வாசகம். 19: 4-8

அந்நாள்களில் எலியா பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்: என் உயிரை எடுத்துக் கொள்ளும்: நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல: பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, எழுந்து சாப்பிடு என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார். ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, எழுந்து சாப்பிடு: ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும் என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நட ந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திருப்பாடல். 34: 1-8

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்: எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி:

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்: அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்து வோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்: அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்: எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி:

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்: அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்: ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி:

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்: அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி:

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நிலைவாழ்வுக்குரியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் போன்ற தீமைகள் அனைத்தையும் நம்மை விட்டு நீக்குமாறு அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் நம்மை மன்னித்தது போன்று, நாமும் ஒருவரை ஒருவர் மன்னித்து அன்புசெய்து வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் பலியால் தூயோராக்கப்பட்டிருக்கும் நாம், கடவுளின் அன்பு பிள்ளைகளாய் மாறும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 4: 30 – 5:2

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங் களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்க ளைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா, அல்லேலூயா விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.அல்லேலூயா.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

அக்காலத்தில் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்என இவர் எப்படி சொல்லலாம்? என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிட மிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவுவிண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எம் திருச்சபை வழிநடத்தும் அனைவருக்காக:

“என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணிலிருந்து இறங்கி வந்தேன்” என்று கூறிய நற்கருணை நாதரே. புரட்சிகர புதிய கண்டு பிடிப்புக்கள், கவர்ச்சியை காசாக்கும் காரியங்கள், மானிடத்தை மாயைக்குள் அழைத்து செல்ல, மனித மாண்பற்ற தன்மைகளால், பண்பற்ற கலாசார நிலைகளால் ஆன்மீகத்தை அழிவு நிலைக்குள்ளாக்கும் எமக்கு அருள் வழிகாட்டி நிறைவாழ்வை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும் பாப்பானவர் ஆயார்கள் அருள்பணியாளர்கள் மற்றும் அனைவரையும் ஆசிர்வதித்து அவர்கள் நாளும் பயனிக்கும் சறுக்கான பாதைவழியே வழுக்காமல் உம்மை நோக்கி சென்று என்றும் உம் திருவுளத்தை நிறைவேற்ற நீரே அவர்களுக்கு துணையாக இருந்தருள வேண்டு என்று உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:

அன்பின் இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திடவும், உலக நாடுகளிலே உணவின்றியும், போதிய மருத்துவ வசதியின்றியும் அல்லலுறும் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளித்துக் காத்திடவும், உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளில் உம்மையே நாடி வரவும், உமது இரக்கத்தால் அனைத்து நலன்களையும் பெற்று, உமக்கு உகந்த மக்களாக உருமாற்றம் பெறவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

இறைவன் தந்த உணவான இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். வாழ்வு தரும் உணவான உமது வார்த்தைகளையும், நிறைவு தரும் விருந்தான நற்கருணையையும், தந்தை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆர்வமாகிய உணவையும் எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டுமென்றும், உம்முடைய மக்களாகிய நாங்களும் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும். முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள வேண்டிய நன்மனதை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:

எமக்கு புத்துயிர் அளிக்கும் எம் அன்பு நேசரே! இறைவா! உமது நற்செய்தியின்படி இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப மனமாற்றத்தை ஏற்ப்படுத்த எங்களை உம் அன்பு சீடர்களாய் இவ்வுலகில் அனுப்பும். அதையே உம் அன்பு கட்டளையபாக ஏற்று அதன்படி இன்றைய சூழலில் வாழ்ந்திடவும், உம்மை தங்கள் சொந்த மீட்பராக ஏற்று வாழ்வோருக்கு ஏற்படும் இன்னல்களை நீர் அறிவீர். அவர்கள் வாழ்விடம் இழந்து சொந்தகளையும் இழந்து தவிக்கும் போது அவர்களின் ஆறுதலாகவும் அவற்றை வெற்றிக்கொள்ள துணையாகவும் இருந்திட வேண்டி, இறைவா உமை மன்றாடுகின்றோம்.

இளைய சமுதாயத்திற்காக :

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும் எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

முதியோர்களுக்காக :

அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)

மனிதர் தம் சொந்த முயற்சியால் கடவுளை அடைய முடியாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைத் தேடிச் செல்கின்ற மனிதர் கடவுளைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான ஆவலை நம் உள்ளத்தில் பதித்தவரே கடவுள்தாம். தம்மை மக்கள் தேடி வர வேண்டும் என்பது கடவுளின் திருவுளம் என்றால் அத்தேடலை நிறைவு செய்பவரும் கடவுளே. எனவேதான் கடவுள் நம்மை முதலில் அன்புசெய்தார் (காண்க: 1 யோவா 4:19 - ''அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்''). இந்த அன்பு எல்லையற்றது; நிகரற்றது. ஆனால், மனிதர் கடவுள்மட்டில் காட்டுகின்ற அன்பு எப்போதுமே குறைவுள்ளதுதான். அந்த அன்பு நம்மிடமிருந்து எழவேண்டும் என்றால் அதற்கு முதல் படியாக அமைவது கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்புதான். எனவேதான் கடவுள் நம்மை ஈர்க்கிறார் என இயேசு கூறுகிறார் (காண்க: யோவா 6:44). காந்தம் இரும்பை ஈர்க்கும்போது இரும்பு காந்தத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். அதுபோல, கடவுள் நம்மை ஈர்ப்பதால் நாம் அவரில் இணைகிறோம்; அந்த அன்பில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே கடவுளை அன்புசெய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குபவர் கடவுளே எனலாம்.

இவ்வாறு கடவுளால் ஈர்க்கப்பட்டு அவருடைய அன்புப் பிணைப்பில் மகிழ்ச்சியடைகின்ற நாம் கடவுளிடமிருந்து தலைசிறந்த ஒரு கொடையைப் பெற்றுக்கொள்கின்றோம். இதை நற்செய்தி நூல்கள் பல சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் சொல்கின்றன. கடவுள் நமக்கு வழங்குகின்ற கொடை யாது? இறையாட்சியில் நாம் பங்குபெறக் கடவுள் நம்மை அழைக்கிறார்; கடவுள் நமக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றார்; நிலைவாழ்வைக் கடவுள் நமக்குத் தருகிறார். இவ்வாறு கடவுளின் கொடையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். இயேசு கடவுளிடமிருந்து வந்து நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, மீண்டும் கடவுளின் அரசில் மாட்சிமை பெற்றதுபோல நாமும் இயேசுவின் மீட்புச் செயல் வழியாகக் கடவுளின் ஆட்சியில் நிறைவாகப் பங்கேற்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். இது கடவுள் நமக்கு வழங்கும் கொடையேயன்றி, நாமாக தேடிக்கொள்கின்ற செல்வம் அல்ல. கடவுள் வழங்குகின்ற கொடை நமக்கு நிலைவாழ்வாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.