இன்று பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு.
திருவழிப்பாட்டு ஆண்டு B (16-08-2015)
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
திருப்பலி முன்னுரை - 1
ஞானத்துக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இன்றைய திருவழிபாடு இயேசுவின் திருவுடலையும், திரு இரத்தத்தையும் உண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது.
உலக பொருட்களில் பற்றுள்ளவர்களாய் வாழாமல், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஞானமுடையவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் திகழ்ந்து, கடவுள் தருபவற்றில் நம்பிக்கை கொண்டு வாழ இயேசு நம்மை அழைக்கிறார்.
நாம் வாழ்வு பெறுவதற்காக, அவர் தன்னையே நமக்கு உணவாக தருகிறார்.
விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உண வாகிய இயேசுவின் சதையாலும்,
இரத்தத்தாலும் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரி மையாக்கிக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
திருப்பலி முன்னுரை - 2
அன்புமிக்க சகோதர சகோதரிகளே!
நன்மை ஏதும் குறையாது நமக்கு வழங்கும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
இன்று பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு.
ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்:
ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள் என்னும் செய்தியே இன்றை திருப்பலின் முக்கிய செய்தியாக இருக்கின்றது.
நாம் நெடுநாள் வாழ விரும்பினால் ஆண்டவரின் திருவுளம் எதுவென அறிந்தகொண்டு தீச் சொல்லினின்று நமது நாவைக் காத்துக் கொண்டு,
தீமையை விலக்கி, நன்மை செய்யவேண்டுமென்ற சிந்தனையும் நமக்குத் தரப்படுகின்றது.
எனவே நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, அவர் தரும் ஞானத்தைப் பெற்று புனித வாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
ஞானத்துக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், கடவுள் தரும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஞானத்தைப் பற்றி பேசுகிறது.
ஞானம் தயார் செய்து அளிக்கும் இன்சுவை விருந்தில் பங்கேற்க அறியாப்பிள்ளைகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஞானம் தரும் விருந்தில் கலந்துகொண்டு கடவுளுக்கு உரியவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
ஞானத்தின் வழியாக நேரிய வழியில் பயணித்து வாழ்வைக்
கண்டடையும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.
நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, ``அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்\'\' என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; ``வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்\ என்றது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திருப்பாடல்34: 1-2. 9-10. 11-12. 13-14
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி
11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? பல்லவி
13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
ஞானத்துக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது நடத்தையைப் பற்றி கருத்தாய் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறார்.
இவ்வுலகின் தீயப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதவாறு, ஞானத்தோடு வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
நமது சொல்லும், செயலும் ஆண்டவரின் மாட்சியை பறைசாற்றும் வகையில் அமைய வேண்டுமென்று பவுல் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் பெயரால் தந்தையாம்
கடவுளுக்கு நன்றி செலுத்துபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.
ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20சகோதரர் சகோதரிகளே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.
திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?\'\' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந் திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
எம் திருச்சபை வழிநடத்தும் அனைவருக்காக:
ஞானத்தின் ஊற்றே இறைவா,
உமது திருமகனின் சதையாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெறும் திருச்சபையின் மக்கள் அனைவரையும்,
ஞானத்தோடும் விவேகத்தோடும் வழிநடத்தும் வலிமையை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நாட்டிற்காக:
வாழ்வின் தொடக்கமே இறைவா,
உலகிற்கு வாழ்வளிப்பதற்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த இயேசுவில் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும்,
அதன் வழியாக நீர் அளிக்கும் நிலை வாழ்வை மக்கள் அனைவரும் பெற்று மகிழவும் உதவிபுரியவும், உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திடவும்,
உலக நாடுகளிலே உணவின்றியும், போதிய மருத்துவ வசதியின்றியும் அல்லலுறும் அனைவரையும் காத்து,
அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளித்துக் காத்திடவும்,
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளில் உம்மையே நாடி வரவும், உமது இரக்கத்தால் அனைத்து நலன்களையும் பெற்று,
உமக்கு உகந்த மக்களாக உருமாற்றம் பெறவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மக்களுக்காக:
குணமளிக்கும் மருத்துவரே இறைவா,
உம்மைப் போற்றுகிறோம். வாழ்வு தரும் உணவான உமது வார்த்தைகளையும், நிறைவு தரும் விருந்தான நற்கருணையையும்,
தந்தை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆர்வமாகிய உணவையும் எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டுமென்றும்,
உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல்,
நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற
நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:
தந்தையே இறைவா! வீண் பேச்சுக்களைத் தவிர்த்து எங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து.
உளமார இசை பாடி உம்மைப்; போற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் உமக்கு நன்றி செலுத்திடும் மனப் பக்குவத்தை
எமக்குத் தந்திட வேண்டுமென்றும், நீதிக்காகவும், அமைதிக்காகவும் உழைப்போருக்கு ஏற்படும் தொல்லையினின்று அவர்களை விடுவித்திடவும்,
கடன் தொல்லையாலும்,அல்லலுறும் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளித்துக் காத்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இளைய சமுதாயத்திற்காக :
“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே
இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு
கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும்.
ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும்
எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
முதியோர்களுக்காக :
அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி,
முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும்
வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
|