யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-09-15

தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) நினைவு


முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.
திருப்பாடல் 31: 1--5. 14-15. 19

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். 2யb உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். பல்லவி

2உ எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என் கடவுள்\' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி

19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன் என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இன்றும் நிறைவுறும் இறைவாக்குகள்

விளையும் பயிர் முளையிலே தெறியும். அகத்தின் அழகு முகத்தில் தெறியும்.குழந்தை இயேசுவை கையில் ஏந்திய சிமியோன் அதன் முகப்பொலிவில் அத்தாயின் உள்ளத்தில் ஊடுறுவிப் பாயும் வாள் ஒன்றினைக் காண்கின்றார். இந்த சமுதாயத்தில் பற்றிப் படர்ந்திருக்கும் காரிருளை அகற்றும் பேரொளி அக் குழந்தையில் சூல்கொண்டிருப்பதைக் காண்கிறார்.

இயேசு இஸ்ராயேல் மக்களை மட்டுமல்லாது பிற இனத்தாரையும் மனுக்குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் அதன் விழைவுகள் அனைத்திலிருந்தும் மீட்கும் மீட்பராக இருப்பார் என்பதை முன்கூட்டியே அறிவிக்கிறார். அறிவித்த அனைத்தும் நிறைவேறுவதை நற்செய்தி சான்று பகர்கிறது. மனித வாழ்வின் காரிருள் சூழ்ந்த இடமெல்லாம் இயேசுவின் அருள் ஒளி வெள்ளமாகப் பெருக்கெடுத்து இருளின் ஆட்சியை அப்புறப்படுத்தி நிம்மதி நிறைந்த மகிழ்ச்சிப் பெரு வாழ்வை வழங்குகிறது. இப்போரொளியிலிருந்து நாமும் தப்பமுடியாது. நம்மையும் இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து ஒளிமயமான எதிர்காலத்தை தரவல்லது.

நம் அன்னை மரியாள், இயேசுவின் பாடுகளோடு தன்னையும் இணைத்து நமக்கு வாழ்வு தருகிறார். தன் இதயத்தை இவ்வாள் இயேசுவின் பாடுகளும் மரணமும்.கல்வாரியில் இயேசு அனுபவித்த ஒவ்வொரு வேதனையும் நம் அன்னை மரியாவின் இதயத்தை வாளாக ஊடுறுவியது. இன்றும் மனிதன் பாவம் செய்யும்போதெல்லாம் கல்வாரியின் கொடூரம் மீண்டும் நடைபெறுகிறது. மீண்டும் கொடிய வாள்கள் அன்னையின் இதயத்தை ஊடுறுவுகின்றன. சிமியோனின் இறைவாக்குகள் நிறைவேறுகின்றன.

மன்றாட்டு:

இறைவா, உயர்நிலையை அடைய வேண்டும் என்றால் நாங்களும் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.