பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறுநீங்கள் வாழ்வடைவீர்கள்ஏசாயா 55: 1-3 உரோமையர் 8:35,37-39 மத்தேயு 14:13-21
இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! படைப்புகள் அனைத்திற்கும் இருக்கும் ஒரே ஆசை எதுவென்றால் உயிர் வாழ வேண்டும். இந்த உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை தான் எல்லா படைப்புகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டங்களில் உயிர் வாழ்ந்தால் போதும் என்று பலஇலட்சங்களை செலவு செய்யவும் மக்கள் தாயராக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நம் ஆண்டவரின் எதிர்பார்ப்பும் நாம் நல்லபடியாக வாழவேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றார்.
இன்றைய முதல் வாசகத்திலே ஏசாயா இறைவாக்கினர் < “தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்” < என்று கூறுகின்றார். நாம் வாழவேண்டும் என்ற நோக்கோடு கடவுளை தேடிவரும்போது நிச்சயம் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை தரும் வாக்குறுதிகளை கொடுக்கின்றார்.
நாம் வாழ வேண்டும்; அதற்கு கடவுளை தேடி வரவேண்டும். கடவுளை தேடி வருவதற்கு தடையாக உள்ள காரணிகள் எவை? என்பதை தூய பவுல் விளக்குகின்றார். < கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? < கடவுளை முழுமையாக நம்பி வாழ்வோரை எதுவும் பிரிக்க முடியாது. இப்படி கடவுளை முழுமையாக நம்பி வாழ்வோரின் வாழ்வில் கடவுள் அற்புதங்களையும், அதிசயங்களையும் செயய்வார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கூறுகின்றது.
ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேரை கடவுள் வாழவைக்கின்றார். இந்த ஐயாயிரம் பேரும் கடவுளைத் தேடிவந்தவர்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எனவே கடவுளால் அற்புதங்களை செய்ய முடிந்தது. இன்று நீங்களும் நானும் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் நம்முடைய வாழ்வை ஒவ்வொரு நாளும் தொடங்குகின்றோம். நம்முடைய வாழ்க்கைப் பயணம் யாரை நோக்கி இருக்கின்றது?
இன்று இந்த உலகில் நாம் வாழ்வதற்கு முக்கியமான தேவை எது? பணமா? கடவுளா? இந்த இரண்டும் மிக முக்கியம். இந்த பணத்தையும், கடவுளையும் நாம் எப்படி அடையப் போகின்றோம் என்று சிந்திக்க தூய பவுல் நம்மை அழைக்கின்றார்.
மனிதவாழ்வின் அடிப்படையாக மாறிய பணம் <
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் காசே தான் கடவுளப்பா; அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா… < பிரிமானவர்களே காகிதம் என்ற பணத்தைக் கொண்டு அனைத்தையும் பெறலாம் என்ற பொய்யான எண்ணம் மக்களிடையே எப்படியோ குடி கொண்டு விட்டது. பணம் இருந்தால்தான் நன்றாக சாப்பிடலாம், நன்றாக தூங்கலாம், அனைவரிடமும் மரியாதையைப் பெறலாம், நினைத்ததைச் சாதிக்கலாம் என்று மக்கள் நினைக்கின்றனர். எனவே இந்த பணத்தை அடைவதற்கு இரவு, பகலாக, உண்ணும்; உண்ணாமலும்; உடலை கண்டு கொள்ளாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு மக்கள் உழைக்கின்றனர். பணம் சம்பாதிப்பது ஒரு மிகப்பெரிய தொழிலாக மாறிவிட்டது.
உதாரணமாக < சாலமோனின் ஞானம் 15 : 12 அவர்களோ நம் வாழ்க்கையை ஒருவகை விளையாட்டாகவும், நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக்கூடிய ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்; ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட, பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக் கொள்கிறார்கள்”. < இப்படி சேர்த்து வைத்த பணம் நிரந்தரமான அல்லது நிம்மதியான வாழ்வை தரும் என்ற உத்திரவாதம் கிடையாது. நிம்மதியாக நான்கு இட்லிகூட சாப்பிட முடிவதில்லை, படுத்தால் தூக்கம் வருவதில்லை, சுற்றியிருக்கும் கூட்டமெல்லாம் வெறும் பணத்திற்காக மொய்க்கும் வண்டுகள் – இதுவே பணக்காரனின் உண்மையான நிலை.
காரணம் பணம் என்பது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ஒரு காகிதம். காகிதங்கள் செல்லாது என்று அறிவித்தால், மறுவேளை உணவிற்கான மளிகைப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். எனவே பணம் நம் வாழ்க்கைக்கு தேவைதான். அந்த பணத்தை நாம் எப்படிப்பட்ட முறையில் நாம் சம்பாதிக்கின்றோம். உண்மையான நேர்மையான முறையில் சம்பாதிக்கும் பணம் நமக்கு வாழ்வைத்தரும் ஆனால் தீயவழியில் சம்பாதிக்கும் பணம் நம்முடைய உயிரை குடித்துவிடும். < உதாரணமாக நீதிமொழிகள் 1 : 19 தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும். < ஆக பணம் மனிதர்களுக்கு வாழ்வையும் கொடுக்கும் அதே வேளையில் மனித உயிரையும் எடுக்கும்.
ஆனால் கடவளை நாடி வருவதற்கு பணம் முக்கியமல்ல. மாறக நம்முடைய மனம் இருந்தால் போதும். ஆனால் இன்று அந்த கடவுளையே பணத்தால் வாங்கிவிடலாம் என்று மக்கள் என்னுகின்றனர். < திருத்தூதர் பணிகள் 8 : 20 அப்போது பேதுரு அவனிடம் "கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ” < என்கிறார். வாழ்வதற்கு பணம் தேவை; ஆனால் நாம் நிம்மதியாக வாழ்வதற்கு கடவுள் மட்டுமே போதுமானவர். எனவே இன்று நமக்கு நிம்மதியான வாழ்வைத் தருவது கடவுளா? பணமா என்ற கேள்வி நம்மில் எழும்போது நம்முடைய பதில் என்ன? < மத்தேயு 6 : 24-ல் எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. <
நாம் உயிர் வாழ தேவை பணமா? கடவுளா? <
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனிடம் பணம் நிறைய இருந்தது ஆனால் அவருடைய உயிரை அவரால் விலைகொடுத்து வாங்க முடியவில்லை. <
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பணம் நிறைய இருந்தது அதுவே அவருக்கு சிறைத்தண்டனையை வாங்கிக் கொடுத்தது. <
1000, 500 என்ற பணத்தை சம்பாதிப்பதறகாக மக்கள் இரவு பகலாக உழைத்தனர். ஒருநாள் இரவு 12 மணிக்கு இந்த பணமெல்லாம் செல்லாது என அறிவித்தவுடன் விலையுயர்ந்த பணம் என்ற காகிதம் செல்லா காசாக மாறிவிட்டது. ஆனால் கடவுள் காகிதம் அல்ல… செல்லாமல் போவதற்கு… நம் கடவுள் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். <
மாறும் பணம் நமக்கு வாழ்வைத்தருகின்றதா? மாறாத கடவுள் நமக்கு வாழ்வைத் தருபவரா? <
அருட்பணி. வேதபோதக சகாய செல்வராஜ், கப்புச்சின்
|