1. திராட்சை தோட்ட வேலையாட்கள் வேலைக்கு வந்த நேரம் என்ன?
2. "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே". இதற்கு நிலக்கிழாரின் பதில் என்ன?
3. செபதேயுவின் மக்கள் யாவர்?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: "உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் ------------------------- இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்கு ------------------------ இருக்கட்டும்"
5. பார்வையற்றோர் இருவரின் கூற்று என்ன?
6. "இவை ஆண்டவருக்கு தேவை". எவை?
7. "இவர் யார்" என்ற கேள்விக்கு மக்கள் கூட்டத்தினரின் பதில் என்ன?
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: "என் இல்லம் இறைவேண்டலின் --------------------. ஆனால் நீங்கள் இதை -------------------- குகையாக்குகிறீர்கள்"
9. "இந்த அத்திமரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?" சீடர்களின் இந்த கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
10. இரு புதல்வர்கள் உவமையில் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் யார்?
11. குத்தகை பழங்களை வாங்க சென்றவர்களை தோட்டத் தொழிலாளர்கள் என்ன செய்தனர்?
12. திருமண விருந்துக்கு அழைப்புப்பெற்றவர்களின் எதிர்வினை என்ன?
13. "சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" என்ற கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
14. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக அமையும் கட்டளைகள் எவை?
15. "மெசியா யாருடைய மகன்" என்ற கேள்விக்கு பரிசேயர்களின் பதில் என்ன?