மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 122
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 21-8,23 ரூத் 1 -7
முடிவுத் திகதி : 2024-02-29

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ராயேல் குலங்களில் மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு யார் வராமல் இருந்தார்கள்?

யூதா மக்கள்
கிலயாத்தை சேர்ந்த மக்கள்
யாபேசில் இருந்த மக்கள்
மீக்கா குல மக்கள்
எமோரிய அடிமைகள்

2. இஸ்ராயேல் கூட்டமைப்பினர் பன்னிரண்டாயிரம் வீரர்களிடம் கூறியது என்ன?

புறப்பட்டுச் செல்லுங்கள்
கிலயாத்தை சேர்ந்த ஆண் பெண் குழந்தைகளை வெட்டி வீழ்த்துங்கள்
எல்லா ஆண்களையும் ஆண்களோடு உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்
கன்னிப் பெண்களை எதுவும் செய்யவில்லை
எமோரிய அடிமைகளை அழைத்துச் சென்றனர்

3. அங்கே இருந்த கன்னிப் பெண்களுக்கு என்ன நடந்தது?

400 கன்னிப் பெண்களை கண்டுபிடித்தனர்
சிலோ பாசறைக்கு கொண்டு சென்றனர்
அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்
அவர்களை கொல்ல மாட்டோம் என்று சொன்னார்கள்
அவர்களை ஆசீர்வதித்தார்கள்

4. இஸ்ரேல் கூட்டமைப்பினர் ரிம் மோன் பாறையில் இருந்தவர்களோடு இடம்பெற்ற நிகழ்வு என்ன?

பெஞ்சமின் மக்களுக்கு தூது அனுப்பினர்
அவர்களுடன் சமாதானம் செய்தனர்
பெஞ்சமின் புதல்வர் அங்கு திரும்பி வந்தனர்
கிலயாத்தை சேர்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை பெஞ்சமின் புதல்வர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்
பெண்களின் எண்ணிக்கை எல்லா ஆண்களுக்கும் மணமுடித்து கொடுப்பதற்கு போதவில்லை

5. இஸ்ரவேல் மக்கள் பெஞ்சமின் மக்கள் குறித்து எவ்வாறு யோசித்தனர்?

பெஞ்சமின் புதல்வர் குறித்து அவர்கள் வருத்தம் அடையவில்லை
ஆண்டவர் இஸ்ரவேல் குலத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தினார் என எண்ணினர்
பெஞ்சமின் புதல்வர் குறித்து அவர்கள் வருத்தம் அடைந்தனர்
பென்யமின் மக்களின் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால் எஞ்சியவர்களுக்கு மனைவி கிடைக்கும் படி என்ன செய்யலாம் என சிந்தித்தனர்
பெஞ்சமின் மக்களுக்கு சொந்த வாரிசு இல்லையேல் ஒரு குலம் அழிந்து விடும் எனவும் சிந்தித்தனர்

6. நாம் பெஞ்சமின் குலத்தினருக்கு நம் புதல்வியரை மனைவியாக அளிக்க முடியாது என இஸ்ராயேல் கூட்டமைப்பினர் ஏன் கூறினர்?

பென்யமின் குலத்தவரோடு அவர்களுக்கு யுத்தம் நிகழ்ந்தமையால்
பெஞ்சமின் குலத்தவரோடு பெண் கொடுப்பவர்கள் சபிக்கப்படுவர் என இஸ்ராயேல் கூட்டமைப்பினர் ஆணையிட்டு கூறியதனால்
அவர்களிடம் ஆண்கள் இல்லாததால்
அவர்கள் வெஞ்சமின் குலத்தின் மீது வெறுப்பு அடைந்திருந்ததனால்
பென்யமின் மக்களை அவர்கள் சபித்ததனால்

7. ஆண்டவருக்கு விழா நடைபெறும் இடம் எங்கே உள்ளது?

கொல்லிமலை
பெத்தேலுக்கு வடக்கே
செங்கடல் கரையில்
லெபனானுக்குத் தெற்கே
சீலோவில்


8. இஸ்ராயேலர் பெஞ்சமின் புதல்வரை நோக்கி என்ன கூறினர்?

செல்லுங்கள் திராட்சை தோட்டத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்
கவனமாக உற்று நோக்குங்கள்
சீலோ மகளிர் நடனமாட வெளியே வருவார்கள்
அப்போது திராட்சைத் தோட்டத்திலிருந்து வெளியே வாருங்கள்
ஒவ்வொருவனும் சீலோ மகளிரில் ஒருத்தியைத் தூக்கிக்கொண்டு பெஞ்சமின் நாட்டுக்கு ஓடி விடுங்கள்

9. சீலோ தந்தையரோ சகோதரரோ முறையிட வந்தால் என்ன நிகழும்?

பெரும் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என சொல்லுவோம்
நாங்கள் எந்த பெண்ணையும் மனைவியாக கவர்ந்து கொள்ளவில்லை
நீங்களும் அவர்களுக்கு பெண் கொடுக்கவில்லை
இவ்வாறு பதிலளிப்போம் எனச் சொன்னார்கள்
நாங்கள் உங்கள் நாட்டை கைப்பற்றுவோம்

10. பெஞ்சமின் புதல்வர்கள் என்ன செய்தனர்?

தங்கள் எண்ணிக்கை கேட்ப நடனமாடிய பெண்களை கவர்ந்து சென்றனர்
கவர்ந்த பெண்களை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றனர்
அங்கு நகர்களை கட்டி எழுப்பி அதில் குடியுறினர்
புதல்வர்கள் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கும் குலத்திற்கும் திருப்பிச் சென்றார்கள்
இஸ்ராயேலர் ஒவ்வொருவரும் தன் உரிமைப் பகுதிக்குச் சென்றார்கள்


11. நீதி தலைவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினால் என்ன நிகழ்ந்தது?

ஒருவர் உழைப்பதற்கென்று தம் மனைவி இருவரையும் அழைத்துச் சென்றனர்
அவர்கள் சென்ற அந்நாட்டின் பெயர் மோவாபு
அவர் பெயர் எலிவேக்கு
மனைவி பெயர் நகோமி
மைந்தர் பெயர் மக்லோன் கிலியோன்


12. பிழைக்க வந்த எலிமேக்கின் விவரம் என்ன?

இவர் யூதாவில் இருந்து பெத்லேகேமைச் சேர்ந்தவர்
இவர் பெத்தலகேமைச் சேர்ந்த ஏப்ராத்துத் குடியினர்
அவர்கள் மோவாபு நாட்டிற்கு வந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள்
எலிமலேக்கு அங்கே இறந்து போனார்
எலிமேக்கு இறந்ததைக் கேள்வியுற்ற அவர் மனைவியும் இறந்து போனார்


13. எலிமலேக்கு இறந்த பின்னர் என்ன நிகழ்ந்தது ?

நகோமிக்கு இரு மைந்தர்கள் தவிர வேறு துணை இல்லை
அவர்கள் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்கள்
அந்தப் பெண்களின் பெயர் ஓர்பா மற்றவர் பெயர் ரூத்து
அவர்கள் பிழைக்க வந்து பத்து ஆண்டுகள் ஆனது
மக்லோனும் மற்றும் கிலியோனும் இறந்து போக நகோமி தனியார் ஆனார்


14. நகோமி கேள்விப்பட்டது என்ன ?

ஆண்டவர் தம் மக்களை கருணையுடன் கண்நோக்கினார்
அவர்களுக்கு உணவு கிடைக்கும் படி செய்தார்
இதனை மோவாபு நாட்டில் இருக்கும் போதே கேள்வி பட்டார்
அவர் மோவாகபு நாட்டை விட்டு போக ஏற்பாடு செய்தார்
அப்போது அவர் இறந்து போனார்


15. நாகோமின் மருமக்கள் என்ன செய்தார்கள்?

தாங்கள் இருந்த இடத்தை விட்டு புறப்பட்டார்கள்
அவர்கள் யூதா நாட்டிற்கு பயணம் ஆனார்கள்
செல்லும் பாதையில் சிங்கம் ஒன்றினை எதிர்கொண்டார்கள்
அந்த இடத்திற்கு சிங்கப்பூரில் என பெயரிட்டார்கள்
இன்னும் அந்த இடம் சிங்கப்பூர் என அழைக்கப்படுகின்றது