மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 131
வேதாகமப் பகுதி : 1 சாமுவேல் 5:10-12 முதல் 1 சாமுவேல் 6:1-15
முடிவுத் திகதி : 2024-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பி வைத்த போது என்ன நிகழ்ந்தது?

எங்களை அழிப்பதற்கு கடவுளின் பேழை வந்துள்ளது
எங்கள் மக்களை அழிப்பதற்கு இஸ்ரயேலரின் கடவுளது பேழை வந்துள்ளது
கடவுளின் பேழையை எக்ரோனுக்கு கொண்டு வந்து விட்டார்கள் என மக்கள் கத்தினார்கள்
பேழை அங்கிருந்து எழும்பி இஸ்ரயேலரிடம் சென்றது
பெலிஸ்திய தலைவர் இந்த நிகழ்வு கண்டு அதிர்ச்சியும் மகிழ்வும் அடைந்தார்

2. கடவுளின் பேழை எக்ரோனுக்கு வந்ததை எதிர்த்த மக்கள் கூட்டம் என்ன செய்தார்கள்?

பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினர்
மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்கள்
இஸ்ரவேலரின் கடவுளின் பேழையை அதன் இடத்திற்கே திருப்பி அனுப்பி விடுங்கள்
எங்களையும் எங்கள் மக்களையும் அவர்கொல்லாதிருக்கட்டும்
கடவுள் தாவோன் வடிவம் கொண்டு அவர்களுள் வந்திறங்கினார்

3. மக்கள் கடவுளின் பேழைக்கான அதிர்வினை எவ்வாறுபுரிந்து கொண்டார்கள்?

கடவுளின் கை அந்நகர் மக்களை கடுமையாக தாக்கியதைத் தெரிந்து கொண்டார்கள்
கடவுளின் கை அந்நகர் மக்களை கடுமையாக தாக்கி அந்நகர் மக்கள் இறந்ததனைப் புரிந்து கொண்டார்கள்
கடவுளின் கை அந்நகர் மக்களை கடுமையாக தாக்கியும் இறவாமல் இருந்த மக்கள் மூல கட்டிகளால் வதைக்கப்பட்டதையும் கண்டார்கள்
கடவுளின் கை அந் நகர் மக்கள் மீது கடுமையாக தாக்கியதால் கடவுளின் பேழை வேண்டாம் என்று வான் அதிரக் கூக்குரல் எழுப்பினார்கள்
தாவோன் கடவுள் அவர்களை அமைதி படுத்தினார்

4. ஆண்டவரின் பேழை பெலிஸ்திய நாட்டில் எத்தனை காலம் இருந்தது?

எழுபது ஆண்டு
6 மாதம்
7 ஆண்டு
7 மாதம்
6 ஆண்டுகள்

5. உடன்படிக்கை பேழையைப்பற்றி முடிவு செய்வதற்குப் பெலிஸ்தியர்கள் என்ன செய்தார்கள்?

அர்ச்சகர்களை அழைத்தார்கள்
குறி சொல்பவர்களை அழைத்தார்கள்
ஆண்டவரின் பேழையை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்
ஆண்டவரின் பேழையை எவ்வாறு அதன் இடத்திற்கு தாங்கள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்க வேண்டினார்கள்
தாவோன் கடவுள் ஆண்டவரின் பேழை வேண்டாம் என்று தப்பி ஓடினார்

6. உடன்படிக்கை பேழை பற்றி பெலிஸ்தியர்கள் அர்ச்சகர்கள், குறி சொல்பவர்களை அழைத்து ஆலோசனை கேட்டபோது கிடைத்த ஆலோசனை என்ன?

இஸ்ரயேலரது கடவுளின் பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது
அதற்கான குற்றப்பலி அவருக்கு செலுத்த வேண்டும்
அப்போது நீங்கள் குணமாக்கப்படுவீர்கள்
அவரது கை உங்களை விட்டு விலகாதிருந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்
காளை மாட்டினை பலியாக கொடுங்கள்

7. அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் கேட்டதும் அவர்கள் சொன்னதும் என்ன?

நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது? என கேட்டார்கள்
பெலிஸ்திய தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பலி செலுத்த வேண்டும் எனச் சொன்னார்கள்
பொன் மூல கட்டிகளின் உருவங்கள் ஐந்து செய்யுங்கள் எனச் சொன்னார்கள்
ஐந்து பொன் சுண்டெலிகளின் உருவங்களைச் செய்யுங்கள் எனச் சொன்னார்கள்
அனைவர் மீதும் உங்கள் தலைவர் மீதும் ஒரே வாதை தான் ஏற்பட்டது எனவும் சொன்னார்கள்


8. அர்ச்சகர்கள் குறி சொல்பவர்கள் மேலும் கூறிய ஆலோசனை என்ன?

பொன் மூலக்கட்டிகளின் உருவங்கள் செய்யுங்கள்
பொன் சுண்டெலிகளின் உருவங்கள் செய்யுங்கள்
இவைகளைச் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள்
அப்போது உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடம் இருந்தும் அவரது கை விலகும்
அப்போது அவரை அணைத்துக் கொள்ளுங்கள்

9. இஸ்ரயேலருடைய முன்னைய விடுதலையில் நிகழ்ந்ததை எவ்வாறு ஞாபகப்படுத்தினர்?

எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இதயங்களை கடினப்படுத்தினர்
நீங்கள் ஏன் உங்கள் இதயங்களை கடினப்படுத்த வேண்டும்
அவர்களைத் துன்புறுத்த அவர்களும் இஸ்ரயேலரைகளைச் செல்லுமாறு விட்டுவிட்டனர்
இஸ்ரவேலருடைய மாமனார் கூறியது போன்று நீங்களும் அவர்களை தாக்குங்கள்
ஒரு பெரிய பொன் கன்று குட்டி செய்து அதனை வணங்குங்கள்

10. பெலிஸ்திய தலைவர்கள் எவ்வாறு பேழையை அகற்ற முடிவு செய்தார்கள்?

நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள்
இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பசுக்களைப் பிடித்து வண்டியில் பூட்டுங்கள்
அவற்றின் கன்று குட்டிகளை விலக்கி அதன் வீட்டுக்கு இட்டுச் செல்லுங்கள்
கறவை பசுக்களுக்கு உணவு கொடுக்க வேண்டாம்
கறவை பசுக்கள் தானாகவே பால் சொரிந்தது


11. புதிய வண்டியைச் செய்தபின் ஆண்டவரின் பேழையை என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை சொன்னார்கள்?

ஆண்டவரின் பேழையை வண்டியின் மீது வையுங்கள்
பொன் உருவங்களை ஒரு பெட்டியில் அதன் அருகில் வையுங்கள்
பின் வண்டியை அனுப்பி விடுங்கள்
அது தானே செல்லட்டும்
அது விரைந்தோடி செல்லும்


12. பேழையைப் பற்றி ஆலோசகர்கள் கூறியது என்ன?

அது தன்னாட்டு எல்லை வழியாக பெத்சமேசுக்குச் சென்றால் இப் பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என அறியலாம்
இல்லையென்றால் அவரது கை நம்மைத் தொடவில்லை என அறிவோம்
மாறாக அது தற்செயலாக நடந்தது என நாம் அறியலாம்
பசுவின் பால் கறந்து அனைவரும் குடிப்போம்
ஒரு பசு இறந்தால் ஒற்றை பசு மூலம் வண்டியை நகர்த்துவோம்


13. பேழையை அகற்றுவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்?

இரு கறவைப் பசுக்களை வண்டியில் பூட்டினார்கள்
அவற்றின் கன்றுகளை தொழுவத்தில் அடைத்து வைத்தனர்
ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெலிகளும் மூலக்கட்டிகளின் உருவங்களும் வைத்திருந்த பெட்டி ஆகியவற்றை வண்டியில் வைத்தனர்
பெத்சமேசுக்குச் செல்லும் பெரும் சாலையில் இடமும் வலமும் விலகாமல் நேரே கத்திக் கொண்டு சென்றனர
தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்


14. பேழை பெத்சமேசுவை வந்து அடைந்தபோது மக்கள் என்ன செய்தனர்?

பெத்சமேசு மக்கள் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தனர்
பேழையை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்
பெத்சமேசுவைச் சேர்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது
அங்கு ஒரு பாறை இருந்தது
வண்டியின் மரத்தை பிளந்து பசுக்களை ஆண்டவருக்கு எரிபலி செலுத்தினர்


15. லேவியர் பேழையைஎன்ன செய்தனர்?

ஆண்டவரின் பேழையை இறக்கினர்
பொன் உருவங்கள் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கிப் பாறை மீது வைத்தனர்
பெத்சமேசு மக்கள் அன்றைய தினம் வேறு பலிகளையும் ஆண்டவருக்கு செலுத்தினர்
எரி பலிகளையும் ஆண்டவருக்கு செலுத்தினர்
பேழை தானாக  ஆண்டவரிடம் சென்றது