மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 135
வேதாகமப் பகுதி : 1 சாமுவெல் 9:23 - 10:13
முடிவுத் திகதி : 2025-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. சாமுவேல் சமையல்காரனிடம் என்ன கூறினான்?

“நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை” என்றார்
ஒரு தொடையை கீழ்பாதியோடு எடுத்து வந்தான்
அந்தத் தொடை மானின் தொடை
அந்த கீழ்த்தொடையை சவுலுக்கு முன் வைத்தான்
அது பன்றியின் தொடை

2. சாமுவேலுடனும் சவுலுடனும் நடைபெற்ற உணவு உரையாடல் என்ன?

இதோ உனக்கு முன்பாக வைத்திருப்பதை சாப்பிடு
நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல் இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது
சாமுவேலும் சவுலுடன் உணவு அருந்தினார்
பன்றி இறைச்சி தான் உண்பதில்லை என சவுல் கூறினார்
எங்குள்ள மக்கள் பன்றி இறைச்சி உண்பதால் தாமும் உண்ண முடியும் என பணியாளர் கூறினார்

3. சாமுவேல் சவுலுடன் உணவு உண்டபின் என்ன செய்தார்கள் ?

அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இருந்து இறங்கி வந்தார்கள்
அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இருந்து இறங்கி நகருக்குள் வந்தார்கள்
சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக்கொண்டிருந்தார்
அழகான புறா ஒன்று கடிதம் கொண்டு வந்தது
அக்கடிதத்தில் சாமுவேல் விண்ணகம் செல்வார் என எழுதப்பட்டிருந்தது

4. அவர்கள் காலையில் துயில் எழுந்த போது என்ன நிகழ்ந்தது?

சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்தார்
எழுந்திரு நான் உன்னை அனுப்பி விடுகிறேன் என்று சொன்னார்
சவுல் எழுந்தார்
சாமுவேல் சவுலுடன் வெளியே சென்றார்
அவர்கள் வெளியே சென்ற போது புறா ஒன்று அவர்கள் மீது வந்து அமர்ந்தது

5. அவர்கள் வெளியே வந்த போது என்ன நிகழ்ந்தது?

சாமுவேலும் சவுலும் நகரின் எல்லை வரை வந்தனர்
சவுல் பணியாளனை தனக்கு முன் நடந்து போகச் சொன்னார்
பணியாளனும் முன்னே நடந்து போனார்
சாமுவேல் சவுலிடம் சற்று நில் என்றார்
கடவுளின் வார்த்தையை உனக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார்

6. சாமுவேல் சவுலுக்கு என்ன செய்தார்?

தைலக் குப்பியை எடுத்து சவுல் தலை மீது ஊற்றினார்
அவரை முத்தமிட்டார்
ஆண்டவர் தமது உரிமை சொத்துக்கு தலைவனாக உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ எனக் கூறினார்
உன்னை இஸ்ரவேலரின் அரசனாக நியமித்துள்ளேன் எனக் கூறினார்
உனது கழுதைகள் எங்கே இருக்கின்றன அதனை கூட்டி செல் என்று சொன்னார்

7. சாமுவேல் சவுலுக்கு என்ன கூறினார்?

பென்யமின் எல்லை செல்குவில் ராகேலின் கல்லறை அருகே இரு மனிதரைக் காண்பாய் என்று சொன்னார்
நீ தேடிப்போன கழுதைகள் அகப்பட்டு விட்டன எனச் சொன்னார்
உனது தந்தை கழுதை பற்றிய கவலையை விட்டு விட்டார்
என் மகனுக்காக என்ன செய்வேன் என தந்தை ஏங்குகின்றார்
இதை கேட்டு சவுல் சந்தோசப்பட்டார்


8. சாமுவேல் சவலுடன் பென்யமின் எல்லையை அடைந்த பின்னர் என்ன நிகழும் எனக் கூறினார்?

நீ தபோரில் உள்ள கருவாலி மரத்தை அடைவாய்
அங்கே கடவுளை வழிபடச் செல்லும் மூன்று மனிதர்களைக் காண்பாய்
ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டி வைத்திருப்பான்
இன்னுமொருவன் இரண்டு அப்பங்கள் வைத்திருப்பான்
வேறொருவன் ஒரு தோற்பை திராட்சை இரசத்தைக் கொண்டிருப்பான்

9. காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்லும் போது என்ன நிகழும்?

அங்கு தொழுகை மேட்டிலிருந்து இருந்து இறங்கி வரும் ஓர் இறைவாக்கினர் குழுவினரை சந்திப்பாய்
அவர்களுக்கு முன் யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும்
அவர்கள் பரவசமடைந்து பேசுவர்
ஆண்டவரின் ஆவி உன் மேல் வரும்
நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய்

10. சவுல் வேறு மனிதனாய் மாற்றப்படும் போது என்ன நிகழும்?

உனக்கு சில அறிகுறிகள் நிகழும்
ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வாய்
பின்னர் நீ கில்காலுக்கு இறங்கிச் செல்
நான் நல்லுறவுப் பலி, எரிபலி செலுத்துவதற்காக உன்னிடம் வருவேன்
நான் வந்து நீ செய்ய வேண்டியவற்றை அறிவிக்கும் வரை ஏழு நாட்கள் நீ காத்திரு


11. சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய போது என்ன நிகழ்ந்தது?

கடவுள் சவுலின் உள்ளத்தை மாற்றினார்
சாமுவேல் சவுலுக்குக் கூறிய அறிகுறிகள் அன்றே நிறைவேறின
ஆகையினால் சவுல் தீபவர்த்தி ஒன்றினை ஏற்றினார்
அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்து அதை நாட்டினார்
அங்கே அன்று இரவு படுத்து உறங்கினார்


12. சவுல் சாமுவேலை விட்டு திரும்பி மலையை அடைந்தபோது என்ன நிகழ்ந்தது?

இறைவாக்கினர் குழு அவர்களை எதிர்கொண்டது
கடவுளின் ஆவி சவுலை ஆட்கொண்டது
சவுல் அவர்கள் நடுவே பரவசமடைந்து பேசினார்
அவரை ஏற்கனவே அறிந்தவர் அவர் இறைவாக்கினரோடு பரவசம் அடைந்து பேசுவதை கண்டார்கள்
சவுலுக்கு பைத்தியம் பிடித்து விட்டது எனச் சொன்னார்கள்


13. சவுல் பரவசமடைந்து பேசுவதை கண்ட மக்கள் என்ன கூறினார்கள்?

கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது
சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?
அங்கிருந்தவர்கள் ஒருவர் இவர் தந்தை யார் என கேட்டார்
சவுலும் இறைவாக்கினர்களுள் ஒருவனே என பழமொழி உருவாகிவிட்டது
சவுலை மக்கள் எண்ணை வார்த்து அவரை இறைவாக்கினர் என அறிவித்தார்கள்


14. சவுல் பரவசமடைந்து பேசி தொழுகை மேட்டிற்கு வந்தபோது என்ன நிகழ்ந்தது?

சவுலின் சிற்றப்பன் அங்கே வந்தார்
அவர் சவுலின் பணியாளரை நோக்கி எங்கே சென்றிருந்தீர்கள் என்று கேட்டார்
சவுலின் சிற்றப்பனிடம் நாங்கள் கழுதைகளை தேடிச் சென்றோம் என பணியாளர் பதில் சொன்னார்
கழுதைகள் கிடைக்கவில்லை என சொன்னார்
சாமுவேலிடம் தாங்கள் சென்றதாகவும் சொன்னார்


15. சாமுவேல் கூறியதையும் சொல்லுமாறு சவுலின் சித்தப்பன் கேட்டபோது பணியாளர் என்ன கூறினார்?

கழுதைகள் அகப்பட்டு விட்டன என எங்களுக்கு உறுதியாகச் சொன்னார்
அரசு பற்றி சாமுவேல் கூறிய செய்தியை அவன் அவருக்கு சொல்லவில்லை
பன்றி இறைச்சி உண்டதாகச் சொன்னார்
புறா கடிதம் கொண்டு வந்ததையும் சொன்னார்
புறாவின் கழுத்தில் இருந்த இரத்தினக்கல் சவுலிடம் இருப்பதாகக் கூறினார்