1. யோசேப்பு யார்?
2. தாம் கண்ட கனவை தம் சகோதரர்களுக்கு யோசேப்பு எவ்வாறு விளக்கினார்?
3. யோசேப்பின் கனவுக்கு சகோதரர்களின் எதிர்வினை என்ன?
4. யோசேப்பைக் கொல்லத் திட்டமிட்டபோது, அவரை காப்பாற்றிய சகோதரன் யார்?
5. யோசேப்பு இறந்தவிட்டதாக, சகோதரர்கள் தந்தையைஎவ்வாறு நம்பவைத்தனர்?
6. யூதாவின் பிள்ளைகள் யாவர்?
7. யூதாவுக்கும், தாமாருக்கும் பிறந்த பிள்ளைகள் யாவர்?
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: அப்பொழுது அவள் "நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!" என்று சொன்னாள். எனவே அவனுக்குப் -- -- -- -- -- -- -- -- -- என்று பெயரிடப்பட்டது. பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட, அவனுக்கு -- -- -- -- -- -- என்று பெயரிடப்பட்டது.
9. போத்திபாரின் வீட்டில் யோசேப்பைக் கடவுள் எவ்வாறு ஆசீர்வதித்தார்?
10. "உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான்" - இது யார் கூற்று?
11. யோசேப்பின் மீது போத்திபாரின் மனைவி வைத்த குற்றச்சாட்டு என்ன?
12. யோசேப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போத்திபாரின் எதிர்வினை என்ன?
13. யோசேப்பு தேடியபோது அவரின் சகோதரர்கள் எங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்?
14. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இதோ வருகிறான் -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்."
15. சகோதரர்கள் யோசேப்பை இஸ்மயேலரிடம் எவ்வளவு காசுக்கு விற்றனர்?