1. கோடிட்ட இடங்களை நிரப்புக: "உயிருக்கு -----------; கண்ணுக்குக் ----------; பல்லுக்குப் ----------; கைக்குக் -----------; காலுக்குக் ---------."
2. எபிரேய அடிமைகள் குறித்த நீதிச்சட்டங்கள் என்ன?
3. வன்முறைச் செயல்கள் குறித்த நீதிச்சட்டங்கள் என்ன?
4. மாட்டு உரிமையாளருக்கான நீதிச்சட்டங்கள் என்ன?
5. ஆட்டை மாட்டை திருடியவருக்கான நீதிச்சட்டங்கள் என்ன?
6. வயல் வெளிகளை அழிப்போருக்கான நீதிச்சட்டங்கள் என்ன?
7. பொருளைத் திருடுவோர் பற்றிய நீதிச்சட்டங்கள் என்ன?
8. "தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்." –இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
9. "கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்" – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
10. "அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்துநாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள்" – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
11. அடகு மற்றும் வட்டி பற்றிய நீதிச்சட்டங்கள் என்ன?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: "என் முன்னிலையில் நீங்கள் ................... இருங்கள்."
13. கடவுளைப் பற்றிய நீதிச்சட்டங்கள் என்ன?
14. கோடிட்ட இடத்தை நிரப்புக: "அவனுடைய மகன் தனக்கென வேறொருத்தியை வைத்துக்கொண்டிருந்தால், -----------, -------------, ----------- இவற்றில் அவளுக்குக் குறை வைக்கலாகாது."
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: "--------------, ---------------- யாருக்கும் நீ தீங்கிழைக்காதே."