1. யூதர்கள் கடைபிடித்த மரபு என்ன?
2. "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" இது யார் கூற்று?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: அவ்வாறே -----------------, -------------------, --------------------- ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
4. “உன் தந்தையையும் தாயையும் மதித்துநட” – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
5. வெளிவேடக்காரர்களுக்கு எசாயாவின் எச்சரிக்கை என்ன?
6. "வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்." – இது யார் கூற்று?
7. கோடிட்ட இட்த்தை நிரப்புக: மனித உள்ளத்திலிருந்தே --------, ------ -----------, -----------, -------------, -----------, -------------, -------------, ----------, ---------------, ----------------, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.
8. கிரேக்க, சிரிய, பெனிசியப் பெண் இயேசுவிடம் வேண்டியது என்ன?
9. உதவி வேண்டிய கிரேக்கப் பெண்ணிடம் இயேசு கூறியது என்ன?
10. “மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” - இதைச் சொன்னவர் யார்?
11. எப்பத்தா என்றால் என்ன?
12. காது கேளாதவரும், திக்கிப்பேசுபவருமான நபரை இயேசு எவ்வாறு குணமாக்கினார்?
13. “ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” - இயேசுவின் இந்த கேள்விக்கு சீடர்களின் பதில் என்ன?
14. “ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” இயேசுவின் இந்த கேள்விக்கு சீடர்களின் பதில் என்ன?
15. பார்வையற்றவர் குணமடைந்தவுடன் சொன்னது என்ன?