இரண்டாவது திருவழிபாடு ஆண்டு 2024-04-21
(இன்றைய வாசகங்கள்:
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 4: 8-12,பதிலுரைப்பாடல் திபா. 118:1, 8-9, 21-23, 26,28,29,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 3:1-2,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18)
திருப்பலி முன்னுரை
அன்புக்குரியவர்களே, நம் ஆயர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருவழிபாடு இயேசுவை நமது ஆயராக ஏற்று, அவரது குரலுக்கு செவிகொடுக்கும் நல்ல ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்காக உயிரைக் கொடுத்த நல்லாயர் இயேசுவுக்குரிய ஒரே மந்தையின் உறுப்பினர்களாக உலக மக்களை ஒன்றிணைக்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் அழைப்பை உணர்ந்தவர்களாய், கிறிஸ்து இயேசுவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 4: 8-12
அந்நாள்களில் பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: 'மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, 'கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார். ' இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
பதிலுரைப்பாடல் திபா. 118:1, 8-9, 21-23, 26,28,29
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள் ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடை க்கலம் புகுவதே நலம்! பல்லவி:
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக் கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயி ற்று! பல்லவி:
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங் களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின் றேன்: என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத் துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி:
இரண்டாம் வாசகம் கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 3:1-2அன்பிற்குரியவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே நானும் என் ஆடுகளை அறிந் திருக்கிறேன்: என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில் இயேசு கூறியது: நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். 'கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல: ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல: ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்: நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்: என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். வையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்: அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு: அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்லாம் வல்ல இறைவா!
திருஅவையின் ஊழியர்கள் அனைவரும் உமது வருகையை அனைவருக்கும் கூறவும் பவுல் இயேசுவின் பெயரால் துணியவுடன் உரையாடியது போன்று, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை, வழிநடத்தவும் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அன்பின் இறைவா!
எம் இளையோர்களை உமது கரம் தருகின்றோம். அவர்கள் புத்துணர்வோடு, தூய உள்ளத்துடன் பணிகளைச் செய்யவும் அவர்கள் எதிர்காலம் புதிய மலரைப்போன்று மலர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
நல்ல ஆயன் நானே என்று கூறிய இறைவா!
நாங்கள் வாழும் எல்லாவித பாவ வாழ்க்கையிலிருந்தும் மனம் மாறி நல்ல ஆயனின் நல்ல மந்தைகளாக வாழ வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
எம்மைத் தேடி வந்த இறைவா!
உமது முதல் வருகையை நினைவு கூருகின்ற நாங்கள் அனைவரும் உமது இரண்டாம் வருகைக்காக எம்மைத் தகுந்த முறையில் தயாரிக்கத் தேவையான அருளையும், ஆற்றலையும் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அரவணைக்கும் இறைவா! தங்களை இளம் வயதில் இறைப்பணிக்காக அர்ப்பணித்து, உமது பணியினை மேற்கொள்ளும் இறைப்பணியாளர்களின் முதிர்ந்த வயதில் தகுந்த பாதுகாப்பும். அன்பும், பராமரிப்பும், உடலுள்ள சுகமும் கிடைத்திட செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
தோழமையின் நாயகனே இறைவா!
எங்கள் வாழ்க்கையில் வெறும் வெளி அடையாளங்களைத் தனித்து ஆடம்பரங்களைக் குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய வரம்தர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
அமைதியின் தேவனே இறைவா! இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே அமைதியை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி, ஒற்றுமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆயனின் கட்டளையை கடைபிடிப்போரிடம் அன்பு நிறைவடைகிறது என உணர்த்தும் ஆயனே! கடுமையான வார்த்தைகளைப் பேசியதால் மனம் புண்ணாகி அவமானமாக இருக்கிறது. பல்வேறு தொல்லைகள் என்னைப் புண்ணாக்கி வேதனையால் நொந்து போகச் செய்துவிட்டது என மனம் வருந்தும் உள்ளத்தினரை அன்பு நிறைந்த வார்த்தையால் அரவணைக்கவும், உமது திருக்காயங்களுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழவும் அருள் பொழிய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|